SYPA தொழில் முனைவோர் விருது பெற்ற உளவியல் சிகிச்சையாளர்

சிறந்த தொழில் முனைவோருக்கான விருது SYPA அமைப்பின் சார்பில் 31.08.2019 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் மாஸ்டர்மைண்ட் கன்சல்டிரைனிங் நிறுவனத்தின் இயக்குனரும், உளவியல் சிகிச்சையாளருமான Dr.ஹுஸைன் பாஷா அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தனது ஏற்புரையில், பயிற்சி மற்றும் உளவியல் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்,
தொழில்முனைவோராக வெற்றி பெற பக்கபலமாக இருந்து வரும் பொறியாளர் கீழை இர்பான் அவர்களுக்கும், SYPA தேர்வுக் குழுவினருக்கும் ஹுஸைன் பாஷா நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

நியூஸ்: சினர்ஜி டைம்ஸ்
PC: Right Brothers Media