Blog

துபாயில் நடைபெற்ற நேர மேலாண்மை மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம்

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் நேர மேலாண்மை குறித்தபயிற்சி முகாம் மற்றும் தொழில் முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி அல் முத்தீனா துபாய் இந்திய‌ன் இஸ்லாமிக்சென்ட‌ர் வ‌ளாக‌த்தில் 16.12.2011 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியினை அஹமது ரிஃபாய் இறைவசனம் ஓதி இனிதே துவைக்கி வைத்தார், சகோ.அப்துல் ரசாக் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு துபாய் இஸ்லாமிய வங்கியின் துணைத் தலைவர் சகோ.ஜாஃபர் அலி அவர்கள் தலைமை தாங்கிதலைமையுரையாற்றினர். க‌ல்லூரியின் க‌ணித‌த்துறை முன்னாள் பேராசிரிய‌ர் முனைவ‌ர் ஏ.சுலைமான் ம‌ற்றும் துபாய் மேக் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் டிரேடிங்மேலாண்மை இய‌க்குந‌ர் ஹ‌பிபுல்லா ஆகியோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ ப‌ங்கேற்ற‌ன‌ர். இந்நிகழ்ச்சியின் நேர மேலாண்மை குறித்த பயிற்சி முகாமை நேஷனல் எலெவேட்டர்ஸ் குழுமத்தின் கூட்டுநிறும மேலாளர் ஹுசைன் பாஷா நடத்தினார். மனிதனின் அன்றாட வாழ்வினைஉள்ளடக்கிய குடும்பம் ,மார்க்கம், சமுதாய பணி மற்றும் வேலையில் மேற்கொள்ளவேண்டிய நேர மேலாண்மை குறித்து சிறந்தமுறையில் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து தொழில் முனைவோருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை அபுதாபி இஸ்லாமிய‌ வ‌ங்கியின்துணைத்த‌லைவ‌ர் அப்துல் சுக்கூர் ஒருங்கிணைத்து ந‌ட‌த்தினார். இக்கலந்துரையாடலில் துபாய் மேக் இண்ட‌ர்னேஷ‌ன‌ல் டிரேடிங்மேலாண்மை இய‌க்குந‌ர் ஹ‌பிபுல்லா, தொழிலதிபர்கள் குத்தாலம் ஏ. லியாகத் அலி, ஜாகிர் மற்றும் துபாய் இஸ்லாமிய வங்கியின்துணை தலைவர் ஜாஃபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு தொழில் தொடங்குவது பற்றியும் அதற்கான வழிமுறைகள் குறித்தும்விளக்கமளித்தனர். மேலும் அவர்கள் த‌ங்க‌ள‌து தொழில் அனுப‌வ‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை முதுவை ஹிதாயத் தொகுத்து வழங்கினார். இறுதியாக திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் நன்றியுரை நவிலநிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. செய்தி : முதுவை ஹிதாயத் நேரமேலாண்மை குறித்து

Read More »

ஷார்ஜாவில் திருக்குரான் வகுப்புகள்

ஷார்ஜாவில் 4 வயது முதல் 15 வரை உள்ள மாணவர்களுக்கு திருக்குரான் தஜ்விது வகுப்புகள் வெள்ளிக்கிழமைகளில் காலை9 மணி முதல் 11 மணிவரை நடைபெறுகிறது மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 055-6800275,06-5448539

Read More »

துபாயில் நேர‌ நிர்வாக‌ம் குறித்த‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம்

டிச‌ம்ப‌ர் 16, துபாயில் நேர‌ நிர்வாக‌ம் குறித்த‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=6117&Country_name=Gulf&cat=new துபாய் : துபாயில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தினர் 16.12.2011 வெள்ளிக்கிழ‌மை மாலை 6.00 ம‌ணிக்கு அல் முத்தீனா

Read More »

அல்-கோபர் தமுமுக நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று இறைவனின் உதவியால் உலகமுழுவதும் கிளைகள் அமைத்து சமுதாயப் பணி செய்துவருது அனைவரும் அறிந்ததே!.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வாயலவில் மட்டும் ஜனநாயகம் பேசாமல் அதை முறையே அமல்படுத்துவதிலும்

Read More »

ராசல்கைமாவில் நடைபெற்ற ஏகத்துவ எழுச்சி மாநாடு

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால், 19.08.2011 வெள்ளிகிழமை மாலை ராசல்கைமாவில்,கிராண்ட் ரெஸ்டாரன்ட்டில் ஏகத்துவ எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தவ்ஹீது எழுச்சி பேரவையும், ராசல்கைமா மண்டல த.மு.மு.க வும் இணந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்,தலமையேற்று நடத்திய

Read More »

கள்ளக்குறிச்சியில் உணர்வாய் உன்னை நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சியில் 17.07.2011 அன்று அர்ரஹ்மானியா பள்ளி வளாகத்தில் உணர்வாய் உன்னை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி கலந்துக் கொண்டவர்களில் சிலரின் கருத்து: S. Salma, B.E. Neyveli This program is very interesting

Read More »