விடைபெறுகிறேன் அமீரகம்!
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
13 ஆண்டுகள் அஜ்மான், துபாய், ராசல்கைமா, ஷார்ஜா என நான்கு அமீரகங்களிலும் பணியாற்றிவிட்டு, சுயமாக தொழில் தொடங்கும் எண்ணத்துடன் இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியா செல்லவிருக்கிறேன்.
என்னுடைய இத்தனை வருட அமீரக வாழ்க்கையில் சமூக நலம் சார்ந்த ஈடுபாட்டை என்னுள் விதைத்த நண்பர்கள் கீழக்கரை M.J. ஹசன், பொறியாளர் இர்ஃபான் ஆகியோருக்கும், தொழில்முறை வழிகாட்டியாக இருந்த சகோதரர் யாசின் நூருல்லாஹ் அவர்களுக்கும், சமுதாய நலன் சார்ந்த விஷயங்களில் உறுதுணையாக இருந்த சகோதரர் அப்துல் ஹாதி அவர்களுக்கும், பல்வேறு மார்க்க விஷயங்களை அறியச்செய்த உஸ்தாத் தஞ்சை ஜலாலுதீன் அவர்களுக்கும், அலுவலகப் பணிகள் பலவற்றையும் கற்றுக்கொடுத்த என் சீனியர்கள் அண்டலிப் ஜுபைரி, அனில் ஜேக்கப் ஆகியோருக்கும், முதன்முதலாக எனக்கு அமீரகத்தில் வேலை கிடைப்பதற்கு பெருமுயற்சி எடுத்த சாச்சா அஹமது பாஷா அவர்களுக்கும், எனது எல்லா விதமான வளர்ச்சிக்கும் ஊக்கமாக விளங்கிய S. கிஷோர் குமார், A.ரஃபீக் அஹமது உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களுக்கும், என்னுடன் இத்தனை வருடங்கள் பழகிய நண்பர்கள், தமுமுக-வின் அமீரக தலைமை நிர்வாகிகள் மற்றும் துபாய், அபுதாபி, அல்-அய்ன், ஷார்ஜா, அஜ்மான், ராசல்கைமா மண்டல நிர்வாகிகள் மற்றும் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள், உடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும், பெயர் குறிப்பிடாத எண்ணற்ற நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், சுயமுன்னேற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்துவதற்கு இயக்க பாகுபாடின்றி வழிவகை செய்த இந்திய முஸ்லீம் சங்கம் (ஈமான்) அமைப்பிற்கும், ஈமான் (நெல்லை ஏர்வாடி) அமைப்பிற்கும், அடியக்கமங்கலம் முஸ்லீம் அஸோஸியேஷன் (அமான்) அமைப்பிற்கும், கூத்தாநல்லூர் கே.என்.ஆர். யுனிட்டி அமைப்பிற்கும், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கும், பரமக்குடி அன்னை ஆயிஷா (துபாய் கிளை) அறக்கட்டளைக்கும் , மதுக்கூர் MTCT அறக்கட்டளைக்கும் , மஸ்கட் தமாம் அமைப்பினருக்கும், கோட்டாறு நண்பர்கள் சங்கம், காயல் தவ்ஹீத் மன்றம், பல்வேறு ஊர்களைச் சார்ந்த அமீரக வாழ் ஜமாத் நிர்வாகிகளுக்கும், தென்றல் டிவி, சங்கமம் டிவி நிர்வாகத்தினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய அமீரக வாழ்க்கையில் சொல்லாலோ, செயலாலோ யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். இத்தனை வருடங்கள் பழகிய பலரையும் பிரிவது என்பது வருத்தத்திற்குரியது என்றாலும், வாழ்வில் அடுத்தடுத்த முயற்சிகளை தொடர்வதற்காக இது போன்ற பிரிவை தவிர்க்கமுடியாது என்பதை உணர்ந்தவனாக.. இறைவன் நாடினால் தொழில்முறை பயணமாக அமீரகம் வரும்போது சந்திக்கலாம் என ஆறுதலுடன் விடைபெறுகிறேன்.
உங்களுடைய பிரார்த்தனையில் என்னுடைய அனைத்து விதமான வெற்றிக்கும் நினைவுகூறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இறைவன் உங்கள் அனைவருக்கும் நன்மையை நாடட்டும். நன்றி!
அன்பில்,
ஹுஸைன் பாஷா
A Thank You, And Goodbye!
It is with mixed emotions that I express this message. I have planned to start a new business venture in India and leaving the UAE in a couple of days. It was not an easy decision to make because I truly enjoy working here in the UAE.
You all have been so good to me and I would like you to know that I thank you for everything.
Please pray for me and send me words of encouragement to face my new endeavours.
I will miss you all.
Luv,
Hussain Basha