தலைநகர் அபுதாபி தொடங்கி, வர்த்தக நகரம் துபாயிலிருந்து, கலாச்சார கோட்டை ஷார்ஜாவிலிருந்து அனைத்து அமீரகங்களும் ஒவ்வொரு சிறப்பம்சத்தை உள்ளடக்கியுள்ளது. பல்லாண்டு காலமாக எங்களுடைய வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறு நல்ல அனுபவங்களை இந்த அமீரகம் கொடுத்திருக்கின்றது, இன்னும் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
குறைகளை பூதக்கண்ணாடி இல்லாமல் பார்த்தால் அமீரகத்தில் வாழும் வாழ்க்கை இன்பகரமானதாகவே இருக்கும். பன்முக கலாச்சாரம், ஊழல் இல்லாத நிர்வாகம், எல்லா விஷயங்களிலும் சர்வதேச தரம், சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலை, விசாலமான சாலைகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட படைப்புகளில் உலக நாடுகளுக்கு முன்னோடி, வியக்கவைக்கும் சுற்றுலா தளங்கள், வரிச்சுமையில்லாத வணிக நடைமுறைகள், நேர்மையான காவல்துறை, முறையான சட்டம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது அமீரகம்.
ஐக்கிய அரபு அமீரகம் தன்னுடைய தேசிய தினத்தை இன்று (02.12.2014) கொண்டாடும் இந்த வேளையில் அமீரக வாழ் இந்தியனாக இந்த நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்கும் அனைத்து தலைவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து குடிமக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
அன்பில்,
ஹூசைன் பாஷா
ஹூசைன் பாஷா