சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சிலில் 29.11.2014, சனிக்கிழமை அன்று வழக்கறிஞராக பதிவு செய்தேன். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீட்பதற்கும் சட்டம் பெரும் உதவியாக இருக்கும். சட்டத்துறையுடன், மன ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் உளவியல் கல்வியும் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான ஒன்று. பல்வேறுபட்ட உளவியல் பிரச்சனைகள்தான் சட்ட பிரச்சனைகளை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன. உளவியல் மற்றும் சட்டம் ஆகியவற்றை இணைத்து நான் செய்யவேண்டிய ஆய்வுக்கான முதல் கட்டத்தை அடைந்ததாக கருதுகிறேன்.

என்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து, ஊக்கமளித்து வரும் நண்பர் கீழை ஹசன் அவர்களுக்கும். என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து உற்சாகமளித்துவரும் என் அன்பு மனைவிக்கும், என் வளர்ச்சியில் மகிழ்ச்சியடையும் எனது தாய்க்கும், சகோதரருக்கும், இரத்த உறவுகளுக்கும், மனைவியின் பெற்றோர் தக்கலை மைதீனா-பொறியாளர் முஹம்மது ஹனீபா, வழக்கறிஞர்கள் காஞ்சி ஜைனுலாபுதீன், காஞ்சி வாசு, அம்பத்தூர் வெங்கடேஷ் மற்றும் நண்பர்கள் கிஷோர்குமார், செந்தில் குமார்; உள்ளிட்டோருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்தியறிந்து வாழ்த்துகள் தெரிவித்த தமுமுக-வின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவருமான முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், முன்னாள் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், தமுமுக மூத்த தலைவருமான செ. ஹைதர் அலி, மாநில தமுமுக மற்றும் மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி, தமுமுக மாநில செயலாளர் முனைவர் பேரா. ஹாஜாகனி, அமீரக தமுமுக செயலாளர் யாசின் நூருல்லாஹ், இணையதள நண்பர்கள் அபுஷேக் முஹம்மது, கொள்ளுமேடு ரிபாயி, முத்துப்பேட்டை முகைதீன், தோப்புத்துறை ஆதம் ஆரிபின் உள்ளிட்டோருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்பில்,

ஹூசைன் பாஷா