த.மு.மு.க.-ம.ம.க. வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல 49 வது செயற்குழு 20-09-2013வெள்ளிக்கிழமை தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்ட்டில்   நடைபெற்றது.

தமிழக ம.ம.க. துணைத்தலைவர் பொறியாளர் சபியுல்லாஹ் கான் அவர்கள் தலைமையில் கூட்டம் சரியாக காலை 10 :20 மணி அளவில் தொடங்கியது.  அல்-கோபார் கிளை நிர்வாகி சகோ. காஜா பஷீர்   அவர்கள் வரேவேற்புரை நிகழ்த்தி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

அடுத்து தலைமை உரை நிகழ்த்திய பொறியாளர் சபியுல்லாஹ் கான் அவர்கள் தனது உரையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக உலகளாவிய சதிகளையும், இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்துள்ள வன்முறைகளையும் நாம் நமது நடவடிக்கைகளை எவ்வாறு அமைத்து கொள்ளவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து மண்டலப் பொருளாளர் அதிரை நஸ்ருத்தீன் சாலிஹ் அவர்கள் கடந்த செயற்குழுவிலிருந்து இன்றுவரை உள்ள  வரவு செலவுகள், பித்ரா, ஜகாத், சதகா வரவு செலவுகள்  அறிக்கையை வாசித்தார். மேலும்  நாம் நம் எதிரிகளை வீழ்த்தவும், நம் சமூகத்தை மேம்படுத்தவும் நிதி அவசியமாகின்றது எனவும், தமிழகத்தில் நமது சகோதரர்கள தங்கள் உடல் உழைப்பை தருகின்றனர் நாம் பொருளாதார உதவிகள் மூலம் சமூகத்தை  மேம்படுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

தொடர்ந்து கிளைவாரியான அறிக்கைகளை  கடந்த செயற்குழுவிலிருந்து இன்றுவரை கிளைகளில் நடந்த செயல்பாடுகளை வாசிக்க அந்த அந்த கிளை பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டனர்.   அதை மண்டலச் செயலாளர் சகோ. இம்தியாஸ் அவர்கள் வழிநடத்தினார். அவற்றில் உள்ள நிறைகளையும் தமது ஆலோசனைகளையும்  எடுத்துரைத்தார்.

 

தொடர்ந்து மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் கடந்த ரமளானில் பித்ரா, ஜகாத், சதகா ஆகியவற்றை வசூலிக்க ஒத்துழைத்த அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துகொண்டார், மேலும் நமது பணிகளில் முக்கியமான பணியாகிய இரத்த தான முகாம்களை தொய்வின்றி நடத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

 

இத்துடன் முதல் அமர்வு ஜும்ஆ தொழுகைக்காகவும் உணவு இடைவேளைக்காகவும் முடித்து கொள்ளப்பட்டது.

ஜும்ஆ தொழுகைக்குப்பின்னர் தொடங்கிய இரண்டாம் அமர்வில் நமது மண்டலத்தின் அணிகளின் பொறுப்பாளர்கள் தங்களது அணியின் செயல்பாடுகளை எடுத்துரைக்க அழைக்கப்பட்டனர் அதில் நமது கிழக்கு மண்டல உறுப்பினர்கள் எண்ணிக்கையையும், அதை இன்னும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தையும்,   காலாவதியான  உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டியும் உறுப்பினர் அட்டை பொறுப்பாளர்  சகோ. அப்துல் குத்தூஸ் அவர்கள் கேட்டுகொண்டார்.

 

தொடர்ந்து வர்த்தகர் அணிசார்பாக அதன் பொறுப்பாளர் பொறியாளர் இபுராஹிம் ஷா அவர்கள் கடந்த ரமளானில் நமது இயக்கத்தின் நிதி ஆதாரமாக இருக்கக் கூடிய சதக்காவை அதிகம் பெற உழைத்த அனைவருக்கும் நன்றியையும், தொடர்ந்து அந்த சகோதர்களுடன் தொடர்பை வைத்துகொண்டு வரும் காலங்களில் நாம் அவர்களிடம் இருந்து நிதிகளை பெறவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

தொடர்ந்து மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ. யூனுஸ் அவர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் நாம் மருத்துவ முகாம்களையும், இரத்த தான முகாம்களையும் சிறப்பாக நடத்த முயற்ச்சிகளை முன்னெடுக்கவேண்டும் என கேட்டுகொண்டார்.

தொடர்ந்து விவகாரங்கள் அணி பொறுப்பாளர் சகோ. சீனி முஹம்மது அவர்கள் மண்டலம் சார்பாகவும், கிளைகள் சார்பாக தாங்கள் செய்த பொது விவகாரங்கள் பற்றி எடுத்துரைத்தார் குறிப்பாக சவுதி அரேபிய அரசின் புதிய சட்டமான நிதாகத் மூலம் பாதிக்கப்பட்டு அநாதரவாக தம்மாம் பார்க்கில் தஞ்சம் அடைந்த நமது சகோதர்களுக்கு தேவையான உணவுகளை சுமார் இரண்டு மாத காலத்திற்கு அல்-கோபார் கிளை சகோதர்களின் உதவியுடன் வழங்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார்.

 

பின்னர் தாயகத்திலிருந்து அலைபேசியில் பேசிய மாநில பேச்சாளர்  சகோ. கோவை சையது அவர்கள் உரை நிகழ்த்தினார்.  அதில் தாயகத்தை விட்டு அயல்நாட்டிற்கு வந்தாலும், நமது தாயகத்தில் வாழும் நம் சமூகத்தின் நலனில் அக்கறை கொள்ளும் தங்களிடம் பேசும்போது நாம் இன்னும் வீரியத்துடன் பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுவதாகவும்,  இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக நமது எதிரிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர் இதை முறியடிக்கும் விதமாக நமது இயக்கத்தின் செயல்பாடுகளை நடத்தி கொண்டு வருகின்றோம். முஸாபர் நகர் கலவரத்தில் சிறுவர்கள் உட்பட 50 பேர் வரை இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் இதை பார்க்கும்போது சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது நமக்கு விழிப்புணர்வு அவசியமாகின்றது அதனால் நம்மால் இயன்ற அளவு போலீஸ் துறை, நீதி துறைகளில் நமது பங்களிப்பை நாம் செலுத்தவேண்டும், நம் வளர்ச்சியை கண்டு அஞ்சும் அரசும், அரசியல் வாதிகளும் நம்மை ஒடுக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர், அதையும் தாண்டி நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம்,  மேலும் மார்க்க ரீதியில் தொய்வுடன் உள்ளவர்களை இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை மூலம் மீட்டு  கொண்டிருக்கின்றோம்.  களப்பணியாற்றும் நமக்கு அல்லாஹ்வின் சோதனையாக தமது பெயரையும், புகழையும், பொருளாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் ஏற்படுகின்றது இதுபோன்ற சிந்தனைகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே எதிபார்த்து நமது செயல்பாடுகளை அமைத்து கொள்ளவேண்டும் எனவும், மார்க்கம் அனுமதிக்காத எந்த செயலும் பயனளிக்காது என்பதையும் மனிதில் வைக்கவேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

 

தொடர்ந்து கிளை பொறுப்பாளர்கள் தங்கள் செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது என்பது பற்றியும், கிளைத் தலைவர்  எவ்வாறு தமது பொறுப்பை மேற்கொள்வது என்பது பற்றியும் மண்டல ம.ம.க. செயலாளர் சகோ. அப்துல் அலீம் அவர்கள் நிர்வாக பயிற்சி வகுப்பை பவர் பாயின்ட் மூலம் நடத்தினார்.

 

மேலும் விவகாரங்கள் அணி  பொறுப்பாளர் பொறியாளர் காயல் இஸ்மாயில் அவர்கள் தாங்கள் செய்த பொது விவகாரங்களில் முக்கியமான நிதாகாத்தின் தற்போதைய நிலையை பற்றி எடுத்துரைத்தார் அதில் சுமார் 25,000,00 (இருபத்தி ஐந்து இலட்சம்) இந்தியர்கள் பணிசெய்யும் சவுதியில் இதுவரை இச்சட்டத்தின் மூலம் நமது பங்களிப்பாக தகவல் பரப்புரையும், கள உதவிகளும், அரசு அலுவலகங்களிலும், இந்திய தூதரகத்தின் பிரதிநிதிகளாக பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தது, மற்றும் இச்சட்டத்தின் மூலம் பாதித்த மக்களுக்கு நிதி மற்றும் உணவு வழங்கியதையும் இந்த சீரிய பணியை செய்ய நாம் இந்த இயக்கத்தில் இணைத்து கொண்டதனாலேயே செய்ய முடிந்தது எனவும் அதற்கு வல்ல அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினார்.

 

தொடர்ந்து சபையோரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது சந்தேகங்களுக்கு பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் அவர்களும் பொறியாளர் அப்துல் காதர் அவர்களும் தெளிவான விளக்கத்தை வழங்கினார்.    

 

தர்பிய்யா பொறுப்பாளர் பொறியாளர் ஜக்கரியா அவர்கள் சீரிய அறிவுரைகளை வழங்கினார் அதில் அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருப்பதன் நோக்கம் நம்மீது அவன் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே ஆகும்.  அல்லாஹ்வின் பாதையில் செயல்படக் கூடிய இந்த இயக்கத்தின் மூலம் இந்த பணியை செய்ய அல்லாஹ் பணித்திருக்கின்றான்.  அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இந்த பணிகளை நாம் செய்கின்றோம்.  இன்னும் உத்வேகத்துடன் செயல்பட நமக்கு அல்லாஹ் அருள் பாலிக்கவேண்டும் எனவும், வெற்றி தோல்விகளை வழங்குபவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே என நாம் முழு நம்பிக்கையும் வைத்து செயலாற்ற வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இறுதியாக த.மு.மு.க. மண்டலத் தலைவர் பொறியாளர் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறினார் மேலும் இந்த செயற்குழுவை சிறப்புடன் நடத்த இடம் மற்றும் உணவு உபசரிப்பு வழங்கிய தம்மாம் மற்றும் அல்-கோபார் கிளையினருக்கு மண்டலம் சார்பாக நன்றி கூற துஆவுடன் கூட்டம் அல்லாஹ்வின் பெரும் கிருபையினால் இனிதே நிறைவுற்றது.        

எல்லாப் புகழும் வல்ல நாயனுக்கே.

செய்திதொகுப்பு:அப்துல் குத்தூஸ்