தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துபை மண்டலத்தின் சார்பாக ஜனவரிஅன்று துபை மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் மண்டலத் தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமையில்  அல் தவார் பூங்காவில்  நடைப்பெற்றது,

 

நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் நாகூர் சையத் அலி அவர்கள் படைத்தவனுக்கும் படைப்பினங்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், அவரது உரையில் படைப்பினங்களுக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகளில் அவர்களை சுவனத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே மார்க்கமாம் இஸ்லாத்தின் பக்கம் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் அழைப்பதுதான் நம் மீது உள்ள முக்கிய கடமை என்று எடுத்துரைத்தார்.

 

அதன் பிறகு அமீரக தமுமுக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் உளவியல் பாதிப்பு  என்ற தலைப்பின் கீழாக உரையாற்றினார், தனது உரையில் உளவியல் பாதிப்புகளை தடுக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

 

தொடர்ந்து சகோதரர் இப்ராகிம் அவர்கள்  இஸ்லாம் விரும்பும் கூட்டமைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார், முஸ்லிம் ஜமாஅத் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றியும், ஜமாத்தின் நிர்வாகிகளின் செயல்பாடுகளை எந்தவகையில் அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும், யாருக்காக நமது பணியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாக விளக்கினார். நமது ணியின் இலக்கு இறைவனின் திருப்தியை அடைவதை மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

 

இறுதியாக மண்டல செயலாளர் அதிரை சாகுல் அவர்கள் கலந்துக் கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு தர்பியா நிகழ்வை நிறைவு செய்தார், எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  

நிகழ்ச்சியின் துளிகள்

 

ஜனவரிஅன்று அமீரகம் முழுவதும் விடுமுறை என்பதால் இன்ப சுற்றுலா செல்லக் கூடிய முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில், நம்மை சுயப் பரிசோதனை செய்வதற்காக நடத்தப்பட்ட நிகழ்வில் துபை மண்டல தமுமுகவின் முக்கிய நிர்வாகிகள்  கலந்துக் கொண்டு தங்களை மெருகூட்டிக் கொண்டார்கள்

 

 டிசம்பர் 31 -12 -2010 , அன்று இரவு சோனாப்பூர் பகுதியில் இளையான்குடியை சார்ந்த உடையப்பன் என்ற சகோதரர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து இஸ்ஹாக் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார் (எல்லாப்புகழும் இறைவனுக்கே) சகோதரர் இஸ்ஹாக் அவர்கள் நிகழ்வில் அழைக்கப்பட்டு கழக சகோதர்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டார்.