23.05.2014, வெள்ளிக்கிழமை அன்று குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி முகாம் துபாயில் ஏ.எஸ்.இபுராஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்க்கவேண்டிய முறைகள், நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் முறை, டீன் ஏஜ் பிள்ளைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு, அதிகப்படியாக வீடியோ கேம்ஸ், பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து மீளும் முறை, பெற்றோர்களின் அணுகுமுறைகள் குறித்த ஆய்வு, மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் உதாரணங்கள், வேலை மற்றும் குடும்பம்-முக்கியத்துவம் அறிதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுடன் பிரபல ஆத்மசேத்னா நிறுவனத்தின் பாடத்திட்டங்களை உள்ளடக்கி இஸ்லாமிய பார்வையில் நடைபெற்ற இந்த பயிற்சிமுகாமில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹூசைன் பாஷா சிறப்பான முறையில் பயிற்சியளித்தார்.

துபாய், அபுதாபி மற்றும் அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆண்கள், பெண்கள் ஆகியோர் பயிற்சிமுகாமில் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். மேலும், அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.

பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளையுடன் இணைந்து அல் அமான் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது

Pictures Courtesy : Sadam Hussain.A