குழந்தை வளர்ப்பு என்பது மகிழ்ச்சியான பயணம். ஆனால் இன்றைக்கு இயந்திரத்தனமான உலகில் குழந்தைகளை சரியான முறையில் வளர்ப்பதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. நமக்கும், குழந்தைகளுக்கும் இடையில் உள்ள புரிதல்களை சரி செய்து உறவுகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து விளக்கும் குழந்தை வளர்ப்பு கலை பயிற்சி முகாம் 23.05.2014, வெள்ளிக்கிழமை அன்று மாலை 04.45 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ளது.

 

இஸ்லாமிய பார்வையில் விளக்கங்கள், நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளும் முறை, டீன் ஏஜ் பிள்ளைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு, அதிகப்படியாக வீடியோ கேம்ஸ், பேஸ்புக் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து மீளும் முறை, பெற்றோர்களின் அணுகுமுறைகள் குறித்த ஆய்வுமன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகள், தன்னம்பிக்கையூட்டும் உதாரணங்கள், வேலை மற்றும் குடும்பம்முக்கியத்துவம் அறிதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுடன் பிரபல ஆத்மசேத்னா நிறுவனத்தின் பாடத்திட்டங்களை உள்ளடக்கி இந்த பயிற்சியை நடத்துகிறார் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ஹூசைன் பாஷா.

 

நிகழ்ச்சியில் பயிற்றுவிக்கப்படும் பல்வேறு நுட்பங்கள் குழந்தைகளுக்கு இந்த வயதில் தெரியாமல் இருப்பது சிறந்தது. ஆகையால் குழந்தைகளை நிகழ்ச்சிக்கு அழைத்துவருவதை தவிர்ப்பது சிறந்தது.

 

முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவர். முன்பதிவு செய்ய மற்றும் விபரங்களுக்கு 050-2933713,050-9595216,055-8622770 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை நிகழ்ச்சிக்கான சிறப்பான ஏற்பாட்டினை செய்துள்ளது.