கடந்த 29-03-2013 வெள்ளிக்கிழமை அபிராமம் பொறியாளர் அப்துல்காதர் அவர்களின் வீட்டில் காலை 10.00 முதல் மாலை 3 மணி வரை தம்மாம் நகர நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி இரு அமர்வுகளாக நடைபெற்றது

முதல் அமர்வில் மண்டலச்செயலாளார் காயல் சகோ.இம்தியாஸ் புஹாரி தலைமையேற்க மாநகரகிளையின் தர்பியா பொறுப்பாளர் பழையபட்டிணம் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் வரவேற்பு உரை நடத்தினார்கள்.

மண்டல தர்பியா பொறுப்பாளார் பொறியாளார் முஹம்மது ரபீக் ஜக்கரியா அவர்கள் நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் மற்றும் பொறுப்புகள் என்ற அமானிதத்தை பற்றி குரான் வசனங்கள்,ஹதீஸ்களிலிருந்து அறிவுரை வழங்கினார்கள .

அதனை தொடர்ந்து மண்டல் தர்பியா இணைபொறுப்பாளர் மவ்லவி அலாவுதீன் பாகவி அவர்கள் காலை மாலை ஓதக்கூடிய சையத் இஸ்திபார் திக்ரின் விளக்கதையும் நன்மையும் பற்றி எடுத்துரைத்தார்கள். இவ்வாறாக முதல் அமர்வு இனிதே நடைபெற்று முடிவுற்றது.

ஜிம்மா தொழுகைக்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் மதிய உணவு அளிக்கபட்டது அதனை தொடர்ந்து இரண்டாம் அமர்வு மாநகர தமுமுக செயலாளர் மதுக்கூர் சகோ. அஜ்மல்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநகர் .. செயலாளர் பனைக்குளம் அபுல்கலாம் ஆசாத் அவர்கள் வட்டியில்லா கடன் வழங்குவதற்கான நெறிகள் பற்றி எடுத்துரைத்தார்கள். அதன் செயல் வடிவம் பற்றி அடுத்த கிளைக்கான செயற்குழுவில் விவாதிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது இதற்கான சில ஆலோசனைகளை மண்டல பொருளாளரும் கழகக்கவியுமான அதிரை சகோ.நஸூருதீன் சாலிஹ் அவர்கள் வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து மாநகர் பொருளாளார கிளைக்கான வரவு செலவுகளை பற்றி விவரித்தார்க இறுதியாக மாநகர து.செயலாளார் செங்கோட்டை சகோ அப்பாஸ் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.

தொகுப்பு: சேகைமைந்தன்