அகில இந்திய மற்றும் வெளிநாடுகளில் படிக்கும் சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டி சென்னை வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் தம்மாம் சர்வதேச இந்திய பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்துக் கொண்டு பல பதக்கங்களை வென்றனர். அரபு நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளியிலிருந்து சென்று வெற்றி வாகை சூடியுள்ள இந்நிகழ்வு பலரையும் வியக்க வைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரோஸ் அஷ்ரப் அலி 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4X100 மீட்டர் மற்றும் 4X400 தொடர் ஓட்டப் பந்தயங்களில்(ரிலே) கலந்துக் கொண்டு 3ம் இடத்தை அடைந்தார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும் நசீஃப், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அப்துல்லாஹ் ஜக்கரியா மற்றும் ரிஸா ரஹீம் ஆகியோர் 4X100 மீட்டர் மற்றும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயங்களில் (ரிலேமூன்றாம் இடத்தைப் பெற்றனர். இதில் அப்துல்லாஹ் ஜக்கரியா என்ற மாணவன் சென்னையைச் சேர்ந்த சவூதி வாழ் பொறியியல் வல்லுனர் ரபீக் ஜக்கரியா அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் முஹம்மது ஷபி, பயிற்சியாளர் அப்துல் லத்தீப் ஷேக், மேலாண்மை குழு தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்தினர்.
செய்தி உதவி: அரப் நியூஸ்