கடந்த 27.1.2012 வெள்ளியன்று தம்மாம் கிளைக் கழக பொதுக்கூட்டம் தம்மாம் வெளிப்பட்டிணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டம் தம்மாம் கிளை நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் கூட்டமாகவும் அமைந்தது.


கூட்டத்தை தம்மாம் கிளையின் தலைவர் பொறியாளர் இபுறாஹீம் ஷா துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். அதில் அவரது தலைமையில் கடந்த காலத்தில் தம்மாம் கிளை மேற்கொண்ட பல்வேறு பணிகளை குறிப்பிட்டுக் காட்டினார்.

அதனைத் தொடர்ந்து தம்மாம் கிளைப் பொருளாளர் சகோ. நெய்னா முஹம்மதுவின் மகன் மாஸ்டர் அன்ஸாரி தனது கணீர் குரலில் கழகப்பாடலான இது அண்ணல் நபி கூட்டம்என்ற பாடலைப் பாட குழுமியிருந்தவர்கள் குதூகலமாயினர்.

பின்னர் மண்டல பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ் அவர்கள் தமுமுகவின் இலட்சிய பயணத்தின் சுவடுகளை சுட்டிக்காட்டி அவையோரை ஆச்சரியப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயீல் எழுச்சி உரையாற்றினார். தனது உரையில் ரஸுல் ஸல் காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளையும், அதன் அடிச்சுவட்டில் தமுமுக செய்து வரும் சேவைகளையும் அத்தகைய நற்செயல்களில் நம்முடைய பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் குர்ஆன் ஹதீஸ் மேற்கோள்களுடன் அழகாக எடுத்துரைத்தார்.

அதன் பின் ஜும்ஆத் தொழுகை மற்றும் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. மவ்லவி சித்தையன் கோட்டை செய்யது இபுறாஹீம் மன்பயீ அவர்களின் அருமையான உரை மற்றும் தொழுகையைத் தொடர்ந்து மதிய உணவு பரிமாறப்பட்டது.

பின்னர் துவங்கிய பிற்பகல் அமர்வின் ஆரம்பமாக மண்டலத் துணைத்தலைவர் சகோ. அப்துல் காதர் கிளை நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பையும், நடைமுறைகளையும் குறித்து விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து நடப்பு நிர்வாகிகள் தத்தமது பெறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர். இதனிடையே, தமிழகத்தில் தலைமை செயற்குழு கூட்டத்தின் விபரங்கள் பெறப்பட்டு சுடச்சுட அவை அவையோரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

தற்சமயம் தலைமை செயற்குழு பரிந்துரை செய்துள்ள மமக பொதுச் செயலாளராக சகோ.தமீமுன் அன்ஸாரி அவர்கள் அலைபேசி வழியே அவையோரிடம் சுமார் அரைமணி நேரம் உரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற கிளை நிர்வாகிகள் தேர்தலில் நிர்வாகிகள் (அவர்களின் விபரங்களை கீழே காண்க) ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் பொறியாளர் ஸக்கரிய்யா அவர்கள் பொறுப்புகளும் அமானிதமே எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சிறப்பான உரையாற்றினார்.

சகோ.பிலால் அவர்களின் நன்றியுரையுடன் அமர்வு இனிதே நிறைவடைந்தது. நூற்றுக்கும் சற்று அதிகமாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் புத்துணர்வுடன் பிரிந்து சென்றனர்.

சிறப்புச் செய்தியாளர்.

புதிய தம்மாம் கிளை நிர்வாகிகளின் விபரங்கள்:
கிளைத் தலைவர் : சகோ.அப்துர்ரஹ்மான் (கமுதி) – 0567554779

தமுமுக செயலாளர் : சகோ.அஜ்மல் கான் (மதுக்கூர்) – 0509419455

மமக செயலாளர்: சகோ.அபுல்கலாம் (பனைக்குளம்) – 0505264698

பொருளாளர்: சகோ.பிலால் (வந்தவாசி) – 0503898671