தம்மாமில் உளவியல் வசந்த விழா

தமுமுக சவுதி கிழக்கு மண்டல நிர்வாகம் மற்றும் தம்மாம் கிளை இணைந்து நடத்திய உளவியல் வசந்த விழா (உணர்வாய் உன்னை) நிகழ்ச்சி 29/3/2019 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது.

தாயகத்திலிருந்து வந்திருந்த விழி அமைப்பின் மாநில செயலாளரும் உளவியல் ஆலோசகருமான சகோதரர் முனைவர் ம. ஹுசைன் பாஷா அவர்கள், நடைமுறை வாழ்க்கை, குடும்ப உறவுகள், சமூகவியல் மற்றும் குர்ஆன் ஹதீஸ் பின்னனியில் சிறப்பான உளவியல் பயிற்சி அளித்தார்.

இந்த சிறப்பு நிகழ்வில் 300 க்கு மேற்பட்ட தமுமுக சகோதரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

சவுதி கிழக்கு மண்டல தமுமுக நிர்வாகிகளுடன் தம்மாம் மாநகரக் கிளையின் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Full news;
http://tmmknews.com/epksa-uu290319/