தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள்

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி 04.05.2019 அன்று சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் ராஜு முருகன், பாலாஜி சக்திவேல், மாரி செல்வராஜ், மீரா கதிரவன், கோபி நயினார், லெனின் பாரதி, தாமிரா, அனீஸ் மற்றும் கவிஞர் மனுஷ்ய புத்திரன், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுடன் கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை V.S. அமீன் அவர்கள் சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.