சென்னை வில்லிவாக்கம் பகுதியில் சிட்கோ நகரில் 25.08.2013, ஞாயிறு அன்று காலை 09.00 மணிக்கு அகமும் புறமும் என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்–பெண் புரிதல் குறித்த அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, மனித வாழ்வின் மகத்துவத்தை உணருதல், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழும் முறைகள் குறித்து பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் பயிற்சி அளித்தார்.
வில்லிவாக்கம் பகுதி தமுமுக சார்பாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.