ஆர்ட் ஆஃப் பீஸ் பவுன்டேஷன் சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சமாதானக் கலைவிழா-2015 என்ற நிகழ்ச்சி 26.07.2015 அன்று நடந்தது. இதில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம், உணர்வாய் உன்னை புத்தக வெளியீடு, அவள் குறும்படம் வெளியீடு, இஸ்லாமிய ஆளுமை விருது வழங்கல் மற்றும் புதிய மூன்று குறும்படங்கள் தொடக்கவிழா நடந்தது.

இந்த விழாவிற்கு முனைவர் பேரா. ஹாஜா கனி அவர்கள் தலைமை வகிக்க, ஆர்ட் ஆஃப் பீஸ் ஃபவுன்டேஷன் அமைப்பின் நிறுவனர் வழக்கறிஞர் ஹூஸைன் பாஷா  விழாவைத் துவக்கிவைத்து அறிமுகவுரையாற்றினார். செயலாளர் ஷாமிலா பாத்திமா வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், தினமணி பத்திரிகையின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், தமுமுக-வின் தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வெல்பேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் சிக்கந்தர், செய்தியாளர்கள் மனோபாரதி, கல்கி பிரியன், அசாருதீன், இமயம் டிவியின் சுஃப்யான், எடிட்டர் அலாவுதீன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

விழாவிற்கான ஒருங்கிணைப்பை குறும்பட இயக்குனர் காஜாமைதீன் அஹ்சனி தலைமையிலான குழுவினருடன், மீடியா 7, ஆர்.எஸ்.டி வீடியோஸ், ஷா ஸ்டுடியாஸ், யுனிவர்சல் சிண்டிகேட்ஸ், கே.கே.வி. குரூப்ஸ் நிறுவனத்தினர்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இறுதியில் பொறியாளர் முஹம்மது ஹனிபா நன்றியுரையாற்றினார்.

நிகழ்வு-1 : கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் வெளியீடு

இந்த ஆவணப்படத்தை RSD வீடியோ நிறுவனர் R.S. தர்வேஷ் முஹைதீன் வெயியிட அதை மக்கள் மனசு மீடியா நிர்வாகி இஸ்மத் இனூன் பெற்றுக்கொண்டார். துபாய் ஏ.ஜி.எம். பைரோஸ்கான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.கீழை எம்.ஜே. ஹசன், பவளம் குழும்மத்தின் தலைவர் மு. செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முடிவில் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஏ.முஹம்மது ஹாரிஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்வு-2 : உணர்வாய் உன்னை ! புத்தகம் வெளியீடு
உணர்வாய் உன்னை புத்தகத்தை மீடியா 7 இயக்குனர் கோவை தங்கப்பா வெளியிட, அதை வில்லிவாக்கம் எல். தாஹா நவீன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் டாக்டர் சலாஹீதீன் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் அமீர் ஜவஹர் வாழ்த்துரை வழங்க, உணர்வாய் உன்னை புத்தக எழுத்தாளர் ஹீஸைன் பாஷா ஏற்புரையாற்றினார்.


நிகழ்வு-3 : அவள் குறும்படம் வெளியீடு 

இந்த குறும்படத்தை த மு மு க மாநில தலைவர் மௌலவி ஜே.எஸ். ரியாயி ரஷாதி வெளியிட அதை பெரம்பூர் ஜமாலியா எஸ். அப்துல் காதர் பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் மக்கள் மனசு மீடியா நிர்வாகி டாக்டர் அப்துல் காதிர், அல் ஜன்னத் துனண ஆசிரியர் அப்துல் ரஹ்மான் மன்பஈ, ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் அவள் குறும்பட இயக்குநர் பி.டி.எம். காஜா மைதீன் அஹ்சனி ஏற்புரையாற்றினார்.

நிகழ்வு-4 : இஸ்லாமிய ஆளுமை விருது

இந்த விருதை திருமதி ஆயிஷா கனி அபுபக்கர் அம்மையாருக்கு சென்னை யுனிவர்சல் சின்டிகேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். நைனார் முஹம்மது வழங்கினார். ரொக்கப் பரிசாக ரூபாய் 10,000 தொகையும், காசோலையும் வழங்கப்பட்டது.

நிகழ்வு-5 : பாஸ்..பாஸ்.. புதிய குறும்படம் தொடக்கவிழா
குறும்பட ஆவணத்தை த மு மு க மூத்த தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ . வெளியிட்டு சிறப்புரையாற்றினார். ப்ளாக் அண்ட் ஒயிட் டிராவல்ஸ் மேலாண்மை இயக்குநர் ஹக்கீம் மன்சூர் ஆவணத்தை பெற்றுக்கொண்டார்.

நான் நோன்பிருக்கேன்.. புதிய குறும்படம் தொடக்கவிழா
எஸ் டி பி ஐ கட்சியின் மாநில தலைவர் கே. கே. எஸ். எம் . தெஹ்லான் பாகவி குறும்பட ஆவணத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இதில் துபாய் ஹெல்திவே மெடிக்கல் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி சாதிக் அக்மல் தொடக்கவிழா ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார்.

புறம் – புதிய குறும்படம் தொடக்கவிழா
புறம் என்ற இஸ்லாமிய குறும்பட ஆவணத்தை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில தலைவர் எஸ். என். சிக்கந்தர் வெளியிட, பரமக்குடி அன்னை ஆயிஷா அறக்கட்டளை நிறுவனர் அப்துல் கபூர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஊக்கப் பரிசுகள்:
ஊடகத்துறை மற்றும் தற்காப்புக் கலையில் சாதனைப் புரிந்த கராத்தே கலீல் குழுவினருக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார், பேராசிரியர் சலீம் பாபு, ஊடகவியலாளர் சுப்யான், சிங்கப்பூர் ஜஃபருல்லாஹ் ரஹ்மானி, துபாய் அக்பர் பாஷா, நாகூர் அப்துல் ஹமீது ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

விழா அழைப்பிதழ்