2015,2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான சமாதானக் கலை விழா 21.12.2018 அன்று சென்னை பி.எம்.கன்வென்ஷன் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் தலைமை வகித்தார்.

சினர்ஜி இண்டர்நேஷனல் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக புதுமடம் ஹலீம் அவர்கள் எழுதிய இந்தியாவின் குரல்வளை நசுக்கப்படுவது ஏன்? என்ற புத்தக வெளியீடு, தலைவர் அண்ணலார் என்ற குறும்பட தொடக்கம், முனைவர் எம்.ஹுஸைன் பாஷா அவர்கள் எழுதிய உளவியல் மற்றும் கற்பித்தல் முறைகள் என்ற புத்தகம் வெளியீடு, சினர்ஜி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பத்து இணையதளங்கள் தொடக்கம், இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்படும் இஸ்லாமிய உளவியல் பட்டயப்படிப்பிற்கான அறிமுகம், தலாக் என்ற குறும்பட தொடக்கம் என பல்வேறு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் அரங்கேற்றப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் வே.மதிமாறன், காயிதேமில்லத் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.ஜெ.ஹாஜாகனி, சமசரம் பத்திரிகையின் துணை ஆசிரியர் வி.எஸ்.முஹம்மது அமீன், ரஹ்மத் அறக்கட்டளையின் தலைவர் முஸ்தபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஆர்ட் ஆஃப் பீஸ் பவுண்டேஷனின் பொருளாளர் பொறியாளர் கா.முஹம்மது ஹனிபா, பவளம் இண்டர்நேஷனல் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் மு.செந்தில் குமார், ஜாக் தலைமையகத்தின் தலைமை இமாம் மவ்லவி எம்.ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்ஸி, ஜம்யிய்யத் அஹ்லே ஹதீஸ் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் மவ்லவி ராஜ் முஹம்மது உமரி மன்பயீ, நாமக்கல் மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ச.சேகர், சமூக செயற்பாட்டாளர் தாஹா நவீன், ரய்யான் ஹஜ், உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் பெண் பொறியாளர் ஷாமிலா அவுக்கார் பாத்திமா, நூர்ஜாஹான் அம்மையார், கவிதாலயா மனோதத்துவ ஆலோசனை மையத்தின் மன நல ஆலோசகர் பா.இளையராஜா, நரம்பியல் நிபுணர் டாக்டர் எம்.எம்.சலாஹுதீன், அல் அஃலா ஹஜ் சர்வீஸின் நிறுவனர் மக்கா அலாவுதீன், ஐபிபி அமைப்பின் பொருளாளர் கீழை எம்.ஜெ.ஹசன், சமூக உயிரோட்டம் மாத இதழைச் சார்ந்த எழுத்தாளர் அத்தேஷ், திரைப்பட இயக்குநர் அஸ்லம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

விழாவை குறும்பட இயக்குநர் காஜா மைதீன் அஹ்சனி அவர்கள் தொகுத்து வழங்கினார். சமாதானக் கலை விழாவை வெற்றிபெறச் செய்த வல்ல இறைவனுக்கும், அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் நிறுவன இயக்குநர் பொறியாளர் கீழை இர்பான் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

விழாவிற்கான ஏற்பாட்டினை சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தைச் சார்ந்த சான் கான், சான் பாஷா, முஸ்தாக், ஃபயாஸ் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.