மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார் – நபி மொழி
சிறந்த குடிமகன் விருதிற்காக
என்னை பரிந்துரைத்த அன்பர்களுக்கும்
தேர்வு குழுவினருக்கும்
புது தில்லி சர்வதேச பதிப்பகத்தின் நிர்வாகத்திற்கும்
எனை ஈன்ற அன்பின் முகவரி அம்மாவிற்கும்
ஆளுமைக்கு வித்திட்ட எனது ஆதர்ச நாயகர் அப்பாவிற்கும்
கல்விக் கடலில் நீச்சலடிக்க தூண்டிய என் சகோதரருக்கும்
என்னுள் ஒன்றாய் உருவாய் இருக்கும் என் வாழ்க்கை துணைக்கும்
மருமகனை மறு மகனாக அரவணைக்கும் மாமா, மாமிக்கும்
சமூக பணியில் மெருகூட்டிய நண்பர் ஹசன் அவர்களுக்கும்
நட்பின் இலக்கணமான நண்பன் கிஷோருக்கும்
என் நலனில் அக்கரை கொண்ட
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
என் நலனில் அக்கரை கொண்ட
அனைத்து நல் உள்ளங்களுக்கும்
என் நன்றியை உரித்தாக்குகிறேன்!
இறைவா நீ பெரியவன், அன்பாளன்
ஆற்றல் மிக்கவன், அகிலங்களின் அதிபதி
இந்த உலகில் மட்டுமல்ல மறுமையிலும்
தொடரட்டும் என் மீது உள்ள கருணை!
பிரார்த்தனைகளுடன்,
ஹூசைன் பாஷா