வாழ்க்கையில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை விளக்கும் பயிற்சி முகாம் 21.12.2012, வெள்ளிக் கிழமை அன்று துபாய் மண்டல தமுமுக அலுவலகத்தில் அமீரக தமுமுக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் நடைபெற்றது. மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது திருக்குர் ஆன் ஓதி, வரவேற்புரை ஆற்றினார்.
ஆக்கப்பூர்வமான எண்ணங்களைத் தாங்கி பயணித்தால் தன்னம்பிக்கையை மேம்படுத்தலாம் என்பதை எளிய முறை பயிற்சிகள் மூலம் பயிற்சியாளர் க.ரா. திருநாவுக்கரசு அவர்கள் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சி ஒருங்கணிப்பாளர்களுக்கு மண்டலச் செயலாளர் மதுக்கூர் சிராஜ் நினைவுப் பரிசு வழங்கினார்.
மண்டல துணைத் தலைவர் அப்துல் காதர் நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பல சமுதாயத்தைச் சார்ந்த மக்களும் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.