விஸ்வரூபம் படம் சம்பந்தமாக ஜனநாயக ரீதியான எந்த ஒரு தீர்ப்பையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிற நாம், நம்முடைய உணர்வுகளை அனைவரும் புரிந்துக் கொள்வார்கள் என்று நினைப்பது தவறு. ஏனென்றால் அவரவருடைய கண்ணோட்டம், மதிப்பீடுகள் அவ்வாறாக அமைந்திருக்கிறது.

 


நம்மில் எத்தனைப் பேர் நம்முடன் உள்ள இஸ்லாம் தெரியாத நண்பர்களுக்கு உண்மையான மார்க்கத்தை எடுத்து சொல்லியிருக்கிறோம்?, அவ்வாறு சொல்லியிருந்தால் இவ்வாறு படம் எடுப்பவர்களுக்கும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நம் உணர்வுகள் விளங்கியிருக்கும்.

நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக ஒருவேளை  படம் வெளியிடப்பட்டால் படம் ஓடும் திரையரங்களுக்கு வெளியில் நின்று  திருக்குர்ஆன், பெருமானார் நபிகளாரின் வாழ்க்கை முறை அடங்கிய புத்தகங்களை இலவசமாக கொடுக்க தயாராகுங்கள். பொதுமக்கள் படித்து தெரிந்துக் கொள்ளட்டும் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று.
நன்மை எது, தீமை எது என்று விளக்கிக் காட்ட இதைவிட ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. தமிழகத்தில் மட்டுமல்ல, விஸ்வரூபம் ஓடும் எல்லா நாடுகளிலும் உள்ள சகோதரர்கள் இதை செய்ய தயாராகுங்கள். அறவழியில் போராடுவோம், அனைவரையும் அரவணைப்போம்.
சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்தே தீரும் (குர்ஆன் 17:81)
அன்புடன்,
ஹூசைன் பாஷா