உம்மல் குவைனில் ஏப்ரல் 3ம் தேதி இரவு தஞ்சாவூரைச் சார்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கணவன் மனைவிக்கிடையே நடந்த சண்டைதான் இதற்கு காரணம் என்று தெரிகிறது. தமிழகத்திலுள்ள பெண்ணின் உறவினர்கள் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டோம். உடலை தாயகத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உம்மா எங்கே என்று கேட்டுக்கொண்டே விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது பாலகனைக் கண்டு கண்கலங்காமல் இருக்க முடியவில்லை.
வெளிநாடுகளில் மனைவி, குழந்தைகளுடன் வாழ்பவர்கள் குடும்பத்துடன் பழகக்கூடிய நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது. ஆண்கள் வெளியிடங்களுக்கு சென்று பலரையும் சந்தித்து பல வேலைகளை செய்யும் போது பிரச்சனைகளை மறந்து இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் பெண்கள் சிறிய பிரச்சனையாக இருந்தாலும் அதையே நினைத்து வருத்தமடைவதுடன், மற்றவர்களிடம் மனம்விட்டு பேசி ஆறுதல் அடையும் வாய்ப்பும் கிடைப்பதில்லை.
தற்கொலை என்பது எவ்வளவு மோசமானது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு கூடிக்கொண்டேயிருக்கிறது.
– ஹூசைன் பாஷா
Archive :
தொடரும் தற்கொலைகள்..தீர்வு என்ன?
http://tmmkonline.org/index.php?option=com_content&view=article&id=2737%3A2012-10-22-03-10-54&catid=81%3Atamilnadu&Itemid=198