தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அஜ்மான் மண்டலமும் யாசின் மெடிக்கல் சென்டரும் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் 06-04-2012 வெள்ளிக்கிழமை அஜ்மான் மண்டலத் தலைவர் சகோ.முத்துப்பேட்டை முகைதீன் தலைமையில் நடைபெற்றது. அமீரக செய்தி தொடர்பாளர் சகோ.நெல்லிக்குப்பம் இக்பால், மண்டலச் செயலாளர் சகோ.காரைக்கால் ஹாஜா மைதீன், மண்டலப் பொருளாளர் சகோ.திருச்சி இல்யாஸ், மண்டல துணைத் தலைவர் சகோ.நெல்லிக்குப்பம் சலீம், மண்டல துணைச் செயலாளர் சகோ.சேலம் ஹாமீன் பாஷா, சகோ.சேலம் ஆசிக் பாஷா, ஷார்ஜா மண்டல தலைவர் சகோ.தோப்புத்துறை அபுல்ஹசன், ஷார்ஜா மண்டல செயலாளர் தோப்புத்துறை இபுறாகிம் ஆகியோர் முன்னிலை வகிக்க, இம் மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராய் வருகை தந்த அமீரகத் தலைவர் சகோ.அதிரை அப்துல் ஹாதி.MBA.,MCom., அவர்கள் மருத்துவ முகாமின் அவசியத்தையும், அமீரகத்தில் தமுமுக செய்துவரும் பணிகளையும் மார்க்க அடிப்படையில் ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்கள்.
மருத்துவர் முஹம்மது ஜாபர் அவர்கள் பொதுவான நோய்களுக்கும், மருத்துவர் சிபின் முகைதீன் அவர்கள் பல் சம்மந்தமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். இம் மருத்துவ முகாமின் இறுதியில் அமீரக துணைத் தலைவர் சகோ.ஹீசைன் பாஷா.MBA.,MCom.,MPhil.,LLB., அவர்கள் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கும் மருத்துவக்குழுவிற்கும் நன்றி கூறினார்கள்.
இம் மருத்துவ முகாமில் நிர்வாகிகள் உள்பட ஏராளாமானோர் கலந்துகொண்டுனர். இம் முகாமிற்கான அணைத்து வேலைகளையும் அஜ்மான் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
எதிர்வரும் காலங்களில் இறைவன் நாடினால் தொழிலாளர்கள் தங்குமிடங்களிற்கே (labour camp) மருத்துவக்குழுவோடு நேரடியாக சென்று இது போன்ற மருத்துவ முகாம்களை நடத்த மருத்துவர் முஹம்மது ஜாபர் அவர்களும், அஜ்மான் தமுமுகவும் உறுதியளித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்…
–
செய்தி – முத்துப்பேட்டை தாவுது இப்ரஹிம்