தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அஜ்மான் மண்டலம் ஒருங்கிணைத்த இலவச பொது மருத்துவ முகாம் அட்வான்ஸ்டு மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. 15-03-2013 அன்று காலை 8.30 மணிக்கு அமீரக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் தலைமையில் துவங்கிய மருத்துவ முகாம் மதியம் 12.15 மணி வரை நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் டாக்டர் மீனாட்சி.MBBS.,MD., டாக்டர்.ராஷ்மி சபாஸ்.MBBS., டாக்டர்.சம்பத்.MBBS., ஆகியோர் சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் நோயாளிகளின் சந்தேகங்களுக்கு டாக்டர் சம்பத் அவர்கள் மிகத்தெளிவாகவும், நேர்த்தியாகவும் விளக்கமளித்து ஆலோசனை வழங்கினார்கள். தமுமுக அஜ்மான் மண்டல பொருளாளரும் பார்மசிஸ்டுமான சகோ.திருச்சி முஹம்மது காசிம் இல்யாஸ் அவர்கள் தலைமையிலான குழு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

அமீரக மக்கள் தொடர்பாளர் நெல்லிக்குப்பம் இக்பால், மண்டல தலைவர் முத்துப்பேட்டை முகைதீன். மண்டல துணைச்செயலாளர் சேலம் ஹாமீம் பாஷா, ஷார்ஜா மண்டல தலைவர் தோப்புத்துறை அபுல் ஹசன். உள்பட தமுமுக சகோதரர்கள் பங்குகொண்ட இம்மருத்துவ முகாமில் 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.