மனமகிழ்ச்சியை ஏற்படுத்திய தம்மாம் NLP பயிற்சி முகாம்

தம்மாம் மாநகரில் 30.03.19 அன்று சுய முன்னேற்றத்திற்கான NLP பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு விதமான பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன. தாயகத்திலிருந்து வருகை புரிந்த உளவியல் நிபுணர் முனைவர் M. ஹுசைன் பாஷா அவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தார்.

கலந்து கொண்டவர்கள் புத்துணர்வு அடைந்ததாகவும், தன்னம்பிக்கை பெற்றதாகவும் கருத்துகளை தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காயல் இம்தியாஸ், அதிரை நஸ்ருதீன் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.