ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராசல்கைமா-வில் தமுமுக மண்டல நிர்வாகிகள் கூட்டம் அமீரக துணைத் தலைவர் ஹூசைன் பாஷா தலைமையில் 14.01.11, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அமீரகத் தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ராசல்கைமா மண்டலத்தை முன்மாதிரி மண்டலமாக கொண்டுவருவதற்கான ஆலோசனையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும், எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மண்டலத்தின் செயல்பாடுகளை தொய்வின்றி செய்ய மர்கஸ் அமைப்பது எனவும், அதற்கு கடியச்சேரி ஹாஜா, மதுக்கூர் பஷீர், ஆதம் ஆரிபின், குடந்தை ஜாபர் ஆகியோர் அடங்கிய குழு மர்கஸ் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும் எனவும், மருத்துவமுகாம், இரத்ததான முகாம், வாராந்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும், மக்கள் உரிமை பத்திரிகையின் விநியோகத்தை அதிகப்படுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் உரிமை பொறுப்பாளராக மதுக்கூர் பஷீர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் துவா ஓதி கூட்டம் நிறைவடைந்தது.
மண்டலத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாக கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இரவு உணவுடன் கூடிய சிறப்பான ஏற்பாட்டினை மண்டலத் தலைவர் ஜாபர், செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!