எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால், 19.08.2011 வெள்ளிகிழமை மாலை ராசல்கைமாவில்,கிராண்ட் ரெஸ்டாரன்ட்டில் ஏகத்துவ எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.தவ்ஹீது எழுச்சி பேரவையும், ராசல்கைமா மண்டல த.மு.மு.க வும் இணந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்,தலமையேற்று நடத்திய துபாய் மண்டல த.மு.மு.க தலைவர் அப்துல் காதர் அவர்கள் "மறைவான இணைவைப்பு" என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள். அவர்களை தொடர்ந்து, யு.ஏ.இ மண்டல து.தலைவர் ஹூசைன் பாஷா அவர்களும், கோவை ஜெய்னுலாபுதீன் அவர்கள்,"மரணம் வருவதற்கு முன்னால்: என்ற தலைப்பிலும், யூசுப் SP அவர்கள் "ஏகத்துவம்" என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
இஃப்தார் உணவு சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மஹ்ரிப் தொழுகைக்கு பின்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு யூசுப் SP அவர்கள் சிறப்பான முறையில் பதிலளித்தார்கள். இறுதியாக மண்டலத் தலைவர் ஹாஜா மொய்தீன் நன்றியுரையாற்றினார்.
ஏரளமான ஆண்களும், பெண்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள். இந்த நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற அரும்பாடு பட்ட , ஆதம் ஆரிப்(மண்ணடி காக்கா) உள்ளிட்ட நிர்வாகிகளை அனைவரும் பாராட்டினார்கள்.
தகவல் – தோப்புத்துறை ஹாஜாதீன் – துபாய்