தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இன்று இறைவனின் உதவியால் உலகமுழுவதும் கிளைகள் அமைத்து சமுதாயப் பணி செய்துவருது அனைவரும் அறிந்ததே!.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வாயலவில் மட்டும் ஜனநாயகம் பேசாமல் அதை முறையே அமல்படுத்துவதிலும் முதன்மையான அமைப்பாக திகழ்கிறது. 
இதனைத் தொடர்ந்து சவூதிஅரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் கிளையின் நிர்வாகிகள் தேர்வு இன்று 14-10-11 மதியம் 1:00மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் சகோ.ஷஃபியுல்லாகான், மண்டலத்துணைத்தலைவர் சகோ.அப்துல்காதர், மண்டலத்துணைத்தலைவர் சகோ.ஜக்கரியா,  மண்டலச்செயலாளர் சகோ.இஸ்மாயில் மற்றும் மண்டலப்பொருளாளர் சகோ.நஸ்ருதீன்ஷாலிஹ். துணைச்செயலாளர்கள் சகோ.அஸ்ரப், சகோ.இம்தியாஸ், சகோ.சீனிமுஹம்மது மற்றும் திரளாக அல்-கோபர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியின் தொடக்கமாக சகோ.ஐய்யூப் நஸ்ருதீன் கிராத்துடன் தொடங்கிவைத்தார் பின் வந்திருந்த மக்களுக்கு ஒழுக்கத்தின் அவசியத்தையும் அதன் சிறப்பையும் விளக்கினார். பின் தேர்தல் அதிகாரியான மண்டலத்துணைத்தலைவர் சகோ.அப்துல்காதர் தேர்தலின் விதிமுறைகளை விளக்கியபின் அல்கோபரின் பழைய நிர்வாகிகள் புது நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதர்காக தங்கள் பதவிகளை ராஜனாமா செய்தார்கள். அதனைத் தொடர்ந்து வந்திருந்த உறுப்பினர்கள் சகோ.இஸ்மாயிலை தலைவராகவும், சகோ.ஹாஜாபஷிரைச் செயலாளராகவும், சகோ.ஷஃபி அஹமதை பொருளாளராகவும் ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தனர். 
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் அறிமுகத்திற்கு பின் மண்டலப் பொருளார் சகோ.நஸ்ருதீன் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார். பின் அமானிதம் பேனுவோம் என்றத் தலைப்பில் மண்டலத்துணைத்தலைவர் சகோ.ஜக்கரியா உரையாற்றினார். 
அதனைத் தொடர்ந்து மக்களின் சந்தேகங்களுக்கு மண்டலத்தலைவர் சகோ.ஷஃபியுல்லாஹ் பதிலளித்தார். பின் அல்கோபர் பொருளாளர் சகோ.ஷஃபி அஹமதுவின் நன்றி உரையுடன் இறைவனின் மாபெரும் கிருபையால் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
மக்கள் தொடர்பாளர்
அல்-கோபர்