டிசம்பர் 16, துபாயில் நேர நிர்வாகம் குறித்த கருத்தரங்கம்
துபாய் : துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் 16.12.2011 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அல் முத்தீனா துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் வளாகத்தில் நேர நிர்வாகம் மற்றும் சிறப்பாக வணிக நிர்வாகம் செய்வது குறித்த கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது என ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் தெரிவித்துள்ளார்.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவரும், லேண்ட்மார்க் ஜீனத் குரூப்பின் மேலாணமை இயக்குநருமான சையது முஹம்மது சாதிக் தலைமை தாங்கி கருத்தரங்கை துவக்கி வைக்கிறார்.
கல்லூரியின் கணிதத்துறை முன்னாள் பேராசிரியர் முனைவர் ஏ. சுலைமான் மற்றும் துபாய் மேக் இண்டர்னேஷனல் டிரேடிங் மேலாணமை இயக்குநர் ஹபிபுல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
நேஷனல் எலிவேட்டர்ஸ் குரூப்பின் கார்ப்பரேட் அஃபைர் மேலாளர் ஹுசைன் பாஷா நேர நிர்வாகம் குறித்த பயிற்சியினை வழங்குகிறார்.
சிறப்பாக வணிக நிர்வாகம் செய்வது குறித்த கருத்தரங்கை அபுதாபி இஸ்லாமிய வங்கியின் துணைத்தலைவர் அப்துல் சுக்கூர் ஒருங்கிணைத்து நடத்துகிறார். இதில் ஹபிபுல்லா மற்றும் ஜாஹிர் உசேன் ஆகியோர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு : 050 54 89 609 / 050 53 566 50 / 050 51 96 433
—
MUDUVAI HIDAYATH