தமுமுக அமீரகத்தின் துணைதலைவர் ஹூசேன்பாஷா அவர்கள் “காலம்” என்ற தலைப்பில் 2 மணிநேரத்திற்க்கு மேலாக ப்ரொஜெக்டர் வழியாக பல்வேறு தகவல்களுடன் சிறப்பாக உரையாற்றினார். இது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
குவைத்தில் 27.04.2012 அன்று நடைபெற்ற காலம் என்ற நேரமேலாண்மை நிகழ்ச்சியைக் குறித்து கலந்துக் கொண்டவர்களில் சிலர் தெரிவித்த கருத்து :
சுல்தான், நாகப்பட்டினம் : அல்ஹம்துலில்லாஹ். இது ஒரு சிறப்பான நிகழ்ச்சி. தினசரி 4 மணிநேரம் நம்மால் வீணடிக்கப்படுகின்றன என்பது ஆச்சரியத்துக்குரிய செய்தி. அதே நேரத்தில் வேதனைக்குரிய செய்தி. நிகழ்ச்சியை சகோ.ஹூசைன் பாஷா நடத்திய விதம் சிறப்பு.
டி.அக்பர் கான், சென்னை : நான் என்னுடைய வாழ்க்கையில் நேரத்தை வீணடித்துவிட்டேன். இனிமேல் என்னுடைய நேரத்தை ஒரு அட்டவணையாக மாற்றிவிடுவேன் என்ற ஒரு நம்பிக்கையோடு செல்கிறேன். எனக்கு இந்த டீச்சிங் பிடித்திருந்தது. இந்த மாதிரி அடுத்தடுத்த இடத்தில் ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன். மிகவும் நன்றாக இருந்தது.
ஆர். முஹம்மது தாஹீர், லால்குடி : அல்ஹம்துலில்லாஹ். உண்மையிலேயே மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. நம் சமுதாய மக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்முடைய நேரத்தை முறைப்படுத்த முடியும். இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அமைப்பிற்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.ஷாஜஹான், பேட்டை, நெல்லை : நிகழ்ச்சி நல்ல விதமாகவும், விழிப்புணர்வாகவும், நல்ல பயனாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் பல இடங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படவேண்டும். அல்லாஹ் உதவி புரிவானாக.
முஸாவுதீன், திருபுவனம்: காலத்திற்கு ஏற்ற தலைப்பு. ஏற்பாடு செய்த தமுமுக-மமகவிற்கு நன்றி
சாகுல் ஹமீது, வடகரை, மாயவரம் : இதைப்போன்ற நிகழ்ச்சியை முஸ்லீம்கள் அதிகமாக உள்ள இஸ்லாமிய கிராமங்களில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பமும் ஆசையும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்கள் சரியாக படிக்காமல் நேரத்தை வீண்விரையம் செய்வதை காணமுடிகிறது.
ஏ.கபூர், நாமக்கல்: காலம் பொன் போன்றது என்ற சொல்லின் அர்த்தத்தை இன்று தெரிந்துக் கொண்டோம்.
ஹெச். சிராஜூதீன், திருபுவனம் : இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளைக் குறித்து எனக்கு மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.
ஏ.பரக்கத் அலி, ஈரோடு : பாடத்திட்டத்தின் விரிவாக்கம் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது. மீண்டும் பள்ளிக்குச் சென்ற மனநிலை இருந்தது. மறுமை வாழ்வை அடையும் இலக்கை மனதில் ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக இருந்தது. சைக்கிள் சுழற்சி போன்ற ஒரு வாழ்க்கை முறையை மாற்றி நமக்கும் ஒரு இலக்கு உண்டு என்பதை நினைவூட்டிய சகோதரருக்கு மிக்க நன்றிகள்.
ஏ.கே. நசீர் அகமது, ஈராடு : நிகழ்ச்சி அருமை. நிகழ்ச்சியை இன்னும் கொஞ்சம் முன்பாகவே தொடங்கியிருந்தால் அனைவரும் அவர்கள் இடத்திற்கு விரைவாக திரும்பி செல்ல வசதியாக இருந்திருக்கும். நடத்திய இயக்க சகோதரர்களுக்கு மனமார்ந்த நன்றி!
முஹம்மது ரிஸ்வான், இலங்கை : எனக்கு தெரியாத எத்தனேயோ விளங்கங்களை தெரிந்துக் கொண்டேன். பிரயோஜனமாக அமைந்திருந்தது. உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மறக்க முடியாதவை. மிக்க நன்றி.
முஹம்மது யாசீன், பாண்டிச்சேரி: இது ஒரு புதிய அனுபவம். இது போன்ற புதுமையான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
முஹம்மது ஜாகீர் உசேன், புதுக்கோட்டை : என்னுடைய வாழ்வில் நேரத்தை இன்று இனிமையாக, சந்தோஷமாக கழித்தேன். இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை.
யூசுப் அலி, திருநெல்வேலி : இஸ்லாமிய மக்கள் மிகவும் தெரிய வேண்டிய விஷயம். நிர்வாகம் செய்யும் இயக்க சகோதரர்கள், இஸ்லாமிய இளைஞர்கள் தெரிய வேண்டிய விஷயம். ஜசாக்கல்லாஹ் ஹைர்.
அ.முகம்மது சாதிக், பூலாம்பாடி: ஜனாப் ஹூசைன் பாஷா அவர்கள் எங்களுக்கு வாழ்க்கையில் நேரத்தை எப்படி கழிப்பது என்பதை நன்றாக தெரிவித்தார். என் வாழ்க்கையை நன்றாக செயல்படுத்தி நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற பாடுபடுவேன். இங்கு எடுத்த குறிப்புகளை எங்கள் ஊர் ஜமாத், வீடு, இளைஞர்களுக்கு எடுத்துச் செல்வேன். பிறகு இதை தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் முஸ்லீம் மக்களுக்கு எடுத்துச் செல்லுமாறு என் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். நான் இங்கு படிக்க ஆசை படுகிறேன். யாரை தொடர்பு கொள்ளவேண்டும்?.
எ.சாதிக், லால்குடி: இந்த நிகழ்ச்சிக்கு வர நேரமில்லையென்று இருந்தேன். நண்பரின் வற்புறுத்தலின் பேரில் வந்தேன். அல்லாஹூ அக்பர். இன்றைய பொழுதை மிகவும் பயனுள்ள வகையில் கழித்ததாக கருதுகிறேன். நன்றி!
முபாரக் ரசீன், இலங்கை: என்னால் ஒரு தீர்மானம் எடுக்கமுடியாது இருந்த நிலைமை இப்போது மாறியிருக்கிறது.
முஹம்மது தௌலத்துல்லாஹ், சென்னை: என்னிடம் உள்ள குறைகளை கண்டறிந்துக் கொள்ள உதவியாக இருந்தது இந்த நிகழ்ச்சி.
அப்துல் ரஷீத், பெருவளப்பூர் : தமுமுக-மமகவின் இந்த நிகழ்ச்சி முந்தைய அனைத்து நிகழ்ச்சிகளையும் விஞ்சி நிற்கிறது. நம்மை இலட்சிய மனிதனாக போராடும் துணிவை இந்நிகழ்ச்சி தந்திருக்கிறது.
அப்துல் குத்தூஸ், கடையநல்லூர் : எனக்குள் பல கனவுகள் இருந்தது, அதை அடைவதற்கான வழியை இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.