சமுதாய சேவகருக்கு பிரிவு உபசரிப்பு மற்றும் அமீரக செயற்குழு கூட்டம் 14-09-2012 அன்று காலை 10 மணிக்கு துபாய் முமுக மர்கஸில் நடைபெற்றது. அமீரக முமுக தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விரு நிகழ்ச்சிகளிலும் அமீரகத்தின் அனைத்து மண்டல மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அஜ்மான் மண்டலத்தின் முன்னாள் செயலாளரும், அபுதாபி மண்டலத்தின் தற்போதைய செயலாளரும், துடிப்பான சமுதாய களப்பணியாளருமான பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் அமீரகத்தில் இருந்து கத்தர் நாட்டிற்கு பணி மாற்றம் கிடைத்து செல்ல இருப்பதால் அவர்களுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சியாக அமீரக செயற்குழு துவங்கியது. துவக்கத்தில் நிகழ்ச்சியின் தலைவரும் அமீரக முமுக தலைவருமான அதிரை அப்துல் ஹாதி அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களின் கடந்த கால பணிகளை நினைவு படுத்தினார்கள். அடுத்ததாக அமீரக முமுக பொதுச்செயலாளர் அண்ணன்.கட்டிமேடு யாசின் நூருல்லாஹ் அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களின் நிகழ்கால பணிகளையும் கடந்தகால பணிகளையும் ஒப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அமீரக முமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்கள் பொறியாளர்.கீழை இர்பான் அவர்களோடு அஜ்மான் மண்டலத்தில் ஆற்றிய களப்பணிகளை நிணைவுபடுத்தி உறுப்பினர்களுக்கு வியப்பையூற்றினார்கள். எல்லோரின் வாழ்த்துரைகளுக்குப்பின் ஏற்புரை நிகழ்த்திய பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் வாழ்த்துரை வழங்கிய அணைவருக்கும் நன்றிகூறியதோடு நான் அமைத்துக்கொண்ட பணிகள் அனைத்தும் மறுமையை இலக்காக வைத்து ஆற்றிய பணிகளே என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்

இரண்டாவது அமர்வாக அமீரக செயற்குழு துவங்கியது, துவங்கிய வேகத்திலேயே மார்க்கப் பணிகள் மற்றும் சமுதாய பணிகள் எதிர்கால களப்பணிகள் பற்றி சுருக்கமாக விவாதிக்கப்பட்டது. பல்வேறு மண்டல நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் என அணைவரும் தங்கள் கருத்துகளை எடுத்து கூறினர். முமுகவின் சேவைகள் மற்றும் சமுதாய பணிகளை விரிவபடுத்துவது என்றும் மார்க்க அரங்குகள், சமுதாய அரங்குகள் என அனைத்து மண்டலங்களும் நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது என்றும் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

இறுதியாக நன்றிகளோடு துஆ ஓதப்பட்டு பொதுக்குழு நிறைவுற்றது. ஜூம்மாவின் நேரத்தை கருதி விரைவாக முடிக்கப்பட்ட பொதுக்குழுவில் கலந்துகொண்ட மன நிரைவோடும், பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த கொள்கை சொந்தங்கள் சந்தித்த மன நிறைவோடும், பொறியாளர்.கீழை இர்பான் அவர்களுக்கு வாழ்த்தி வழி அனுப்பிய சந்தோசத்தோடும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலைந்துசென்றனர். அல்ஹம்துலில்லாஹ்…. 

அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்