அபுதாபி மண்டல த.மு.மு.க வின் மார்க்க சொற்பொழிவு மற்றும் சகோ. கீழை இர்பானுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி 21-09-2012 அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெற்றது. அமீரக முமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷாஅவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அபுதாபியின் அனைத்து பகுதி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சகோ. பீர் முஹமது அவர்கள் கிராத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள், அமீரக முமுக துணைத்தலைவர் ஹூசைன் பாஷா அவர்களின் தலைமை உரையை தொடர்ந்து அபுதாபி மண்டலத்தின் புதிய செயலாளராக கீழை அஹமத் அவர்களும் துணை செயலாளராக திருச்சி சபியுல்லாஹ் அவர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அடுத்ததாக சகோ. திருச்சி அப்துர் ரஹ்மான் அவர்கள் " சமுதயாத சீர்கேடுகளும் அதிலிருந்த பாதுகாப்பை பெரும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து சகோ. கீழை இர்பான் அவர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகளை அணைத்து நிர்வாகிகளும் நினைவு படுத்தினார்கள். எல்லோரின் வாழ்த்துரைகளுக்குப்பின் ஏற்புரை நிகழ்த்திய பொறியாளர்.கீழை இர்பான் அவர்கள் வாழ்த்துரை வழங்கிய அணைவருக்கும் நன்றிகூறியதோடு நான் அமைத்துக்கொண்ட பணிகள் அனைத்தும் மறுமைக்காக ஆற்றிய பணிகளே என்பதை மிகத்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக நன்றிகளோடு துஆ ஓதப்பட்டு அமர்வு இனிதே நிறைவுற்றது.

H.AHAMED ABDUL KADHER