ஷார்ஜாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி
பெண்களின் ஆளுமைத்திறமை மேம்படுத்தும் நோக்கோடு 05.10.2012, வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு உணர்வாய் உன்னை என்ற பெண்களுக்கான சிறப்பு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஷார்ஜாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோபம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், நம் உறவினர்கள், நண்பர்களிடம் அன்பாக இருத்தல், அமைதி, சமாதானத்தை மக்கள் மத்தியில் உண்டாக்குதல், நம்மில் உள்ள குறைபாடுகளை நீக்கி, நமது எண்ணத்தை வளப்படுத்துதல், கடந்த காலத்தின் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நிகழ்கால வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்தல், இறைவன் நம்மை படைத்த நோக்கத்தை அடைதல் என பல காரணிகளை மையப்படுத்தி இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
இஸ்லாமிய தத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் நடத்துகிறார். பெண்களுக்காக இந்நிகழ்ச்சியை ஏற்கனவே துபாய், ஷார்ஜா, தம்மாம், சென்னை போன்ற இடங்களில் சிறப்புற நடத்தி பெண்களின் அன்றாட வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்பட வழிவகுத்தவர்.
பயிற்சியில் கலந்துக் கொள்பவர்கள் 050-3851929 அல்லது 055-2353399 என்ற அலைபேசி எண்ணிலோ, அல்லது info@unarvaiunnai என்ற மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம் என இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஷார்ஜா மண்டலம் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Courtesy : www.tmmk.info