அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் அக்டோபர் 27-ம் தேதி மாலை 06.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களைக் குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டுத்தெரிந்துக் கொள்ளும் வகையில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.  

 

சவுதி அரேபியா நாட்டிலிருந்து வருகைப் புரியும் அஃப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா அவர்கள் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பதிலளிப்பார்.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள விரும்புகிறவர்கள் 055-5188249, 050-9431980, 050-5959697 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம். துபாய் மண்டல தமுமுக சார்பாக, இந்நிகழ்ச்சியை மண்டலத் தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையிலான குழுவினர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.