கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் – விமர்சனம்…!

கடல் கடந்த பறவைகள் எனும் ஆவணப்படத்தை பார்த்தேன், கடலை கடக்கும் பறவைகள் எங்கும் நீண்ட நாட்கள் தங்குவதில்லை, அவை தங்கினாலும் தம் பயணத்தை நிறுத்துவதில்லை. ஆனால் பறவைகள் உடலில் கொழுப்பை சேமித்துக்கொண்டு பறக்கின்றன.

உலகையே வலம் வரும் ஷ்வாலோ பறவைகள் தம் வாயில் சிறு குச்சியை ஏந்திய வண்ணம் பறக்கின்றன. நெடும் பயணத்தில் குச்சியை கடலின் மேல் போட்டு ஓய்வெடுப்பதோடு உணவும் தேடிக்கொள்கின்றன. மனிதர்கள்தான் வெறும் கையை வீசிக்கொண்டு பறக்கிறார்கள். அவர்களிடம் சிறந்த கல்வி, ஈன்ற பயிற்சி இருப்பின் அவர்களும் கடல் பறவையைபோல் பயணிப்பர். ஷ்வாலோ பறவையைபோல் செயல்படுவர்.

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்லும் நமது சகோதரர்கள் நல்ல படிப்போடு சென்றால் நல்ல வேலைகளை பெறலாம். குடும்பத்தோடு வாழும் வசதிகளையும் பெறலாம். வயல்களை விற்று, நகைகளை விற்று கடன்பட்டு செல்பவர்கள் நல்லபடிப்பு இல்லாததால் மிக குறைந்த ஊதியம்பெற்று தனிமைப்பட்டு மனம் புழுங்கி வாழவேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே நல்ல படிப்போடு தகுதிகளை வளர்த்துக்கொண்டு செல்வதை நற்பேற்றைத்தரும்.

வருங்காலத்தை வளமாக்கும் இந்த சிந்தனையை கடல் கடந்த பறவைகள் என்கிற ஆவணப்படம் எனக்கு தந்தது. படத்தில் முனைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,பேரா.முனைவர் தமிழ்ச்செல்வன், கவிஞர் யுகபாரதி மூவரும் கடல் கடந்த தோழர்களின் துன்பங்களை நன்கு பதிவு செய்து தீர்வும் கூறியுள்ளனர். இதைப்போல் கடல் கடந்து வாழம் அருமை சகோதரர்களும் தம் நிலையை நன்கு பதிவு செய்துள்ளனர்.

உள்ளங்களை கசியவைக்கும் ஆவணப்படம் கடல் கடந்த பறவைகள். அருமை சகோதர்களின் அற்புத படபிடிப்பு…முயற்சி வெல்லட்டும்.

அன்புடன்,

தாழை மதியவன்

எழுத்தாளர்