25.06.2015, வியாழன் கிழமை அன்று அபுதாபியில் நடைபெற்ற அமீரக தமுமுக செயற்குழுவில், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ராசல்கைமா, புஜைரா, உம்மல்குவைன் உள்ளிட்ட தமுமுக மண்டலங்களை நிர்வாகம் செய்யும் அமீரக தமுமுக-வின் தலைமை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். 

தமுமுக தலைவர் மௌலவி ஜெ.எஸ்.ரிபாயி ரஷாதி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமீமுன் அன்சாரி ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து, திரளாக செயற்குழவில் கலந்துக்கொண்ட நிர்வாகிகளிடம் கழக பணியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

புதிய நிர்வாகிகள்:

அமீரகச் செயலாளர் – அதிரை அப்துல் ஹாதி
அமீரகப் பொருளாளர் – யாசின் நூருல்லாஹ்

அமீரக துணைச்செயலாளர்கள்:
ஹூஸைன் பாஷா
டாக்டர் அப்துல் காதிர்
மதுக்கூர் அப்துல் காதர்

மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்: இஸ்மத் இனூன்