பிசினஸ் சீக்ரெட்ஸ் நூல் திறனாய்வு

பிசினஸ் டிஎன்ஏ நிறுவனத்தின் சார்பாக பிரைன்ஷிப் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரு புத்தகத்தைக் குறித்த திறனாய்வும், பணத்தை பெருக்குவதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது.

03.05.2019 அன்று சென்னையில் நடைபெற்ற 23 வது வார நிகழ்ச்சியில் பிசினஸ் சீக்ரெட்ஸ் என்ற நூலினைக் குறித்து உளவியல் நிபுணர் முனைவர் M. ஹுஸைன் பாஷா அவர்கள் திறனாய்வு செய்தார். மேலும், ஸ்ரீதர் நாராயணன் அவர்கள் பணத்தை பெருக்குவதற்கான வழிமுறைகளைக் குறித்து பயிற்சி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை வெங்கட், ஹனிஃபா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

– Synergy Times