தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டு அணியான விழி அமைப்பின் சார்பாக புதிய பள்ளிக்கூடங்கள் தொடங்குவதற்கான சிறப்பு பயிற்சி முகாம் விழி அமைப்பின் மாநில செயலாளர் முனைவர் எம். ஹுஸைன்பாஷா அவர்களின் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டை பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரி வளாகத்தில் 08.09.2018 அன்று நடைப்பெற்றது.

விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் புதுமடம் ஹலீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். தமுமுக மமக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.தமுமுக மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

பள்ளிகளைத் தொடங்குவதற்கான விதிமுறைகள் குறித்து தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், விழி அமைப்பின் திருச்சி மாவட்டச் செயலாளருமான முஜம்மில்கான் அவர்கள் பயிற்சியளித்தார். பள்ளிகளில் நிதி மேலாண்மையை கையாளும் முறையைக் குறித்து விழி அமைப்பின் மாநில துணை செயலாளர் பொறியாளர் அப்துல் சமது அவர்கள் பயிற்சியளித்தார்.

இறுதியாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை உஸ்மான்கான் அவர்கள் நிகழ்ச்சியின் சாராம்சங்களை விளக்கி நிறைவுரை நிகழ்த்தினார்கள்.இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

விழாவிற்கான ஏற்பாட்டினை விழியின் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் காதர் பாஷா, விழியின் வடசென்னை மாவட்ட செயலாளர் அப்துல் மஜீத், சினர்ஜி இண்டர்நேஷனல் குழம அலுவலர் தமீமுல் அன்சாரி உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

TESTIOMONIALS