குடிபோதையை மறக்கடிக்க சிறப்பு பயிற்சி

மது, புகையிலை, கஞ்சா போன்ற பழக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான சிறப்பு பயிற்சியை சென்னையில் உள்ள டி.டி.ரங்கநாதன் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் 23.04.2019 அன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி முகாமில் ஏராளமான மனநல ஆலோசகர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாட்டினை மூத்த உளவியல் நிபுணர் பேராசிரியர் ராஜ்மோகன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

மாஸ்டர்மைண்ட் கன்சல்ட்ரைனிங் சார்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் M. ஹுசைன் பாஷா அவர்களும், இணை இயக்குனர் ஷாமிலா அவர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

– சினர்ஜி டைம்ஸ்